பாடல் 521 - கயிலைமலை - திருப்புகழ்
ராகம் - அடானா;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனனத் ...... தனதான தனதனனத் ...... தனதான |
புமியதனிற் ......ப்ரபுவான புகலியில்வித் ...... தகர்போல அமிர்தகவித் ...... தொடைபாட அடிமைதனக் ...... கருள்வாயே சமரிலெதிர்த் ...... தசுர்மாளத் தனியயில்விட் ...... டருள்வோனே நமசிவயப் ...... பொருளானே ரசதகிரிப் ...... பெருமாளே. |
இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே.
* புகலி = சீர்காழி: உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால் புகலி என்ற பெயர் பெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 521 - கயிலைமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகலி, பெருமாளே, தனதான, தனதனனத்