பாடல் 520 - கயிலைமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தனன தந்தன தானனா தனதனன தனன தந்தன தானனா தனதனன தனன தந்தன தானனா தனதனன ...... தனதான |
பனியின் விந்துளி போலவே கருவினுறு மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர் பனைதெ னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப் பருவ முந்தலை கீழதாய் நழுவிநில மருவி யொன்பது வாசல்சே ருருவமுள பதுமை யின்செயல் போலவே வளிகயிறி ...... னுடனாடி மனவி தந்தெரி யாமலே மலசலமொ டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின் மயம யின்றொரு பாலனா யிகமுடைய ...... செயல்மேவி வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும் அறம றந்தக மீதுபோய் தினதினமு மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய் தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு ...... மவுணோர்கள் சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள் குருதி யெண்டிசை மூடவே அலகைநரி சிறையி னங்களி கூரவே நகையருளி ...... விடும்வேலா சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... பெருமாளே. |
பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில், அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய், பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப் பழ அளவுக்கு வயிறு பெரிதாகி, (பூமிக்கு வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப் பூமியை அடைந்து, ஒன்பது துவாரங்களைக் கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது, இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மல சலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும், தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு, ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர, நாள்தோறும் மனம் உடைந்து, உருக் குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ என்ற தாளத்துக்கு ஏற்ப, முரசு, சங்கு, பேரிகை, மேள வகை, அதமக் கருவியான புற முழவு, எக்காளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கும் ஒலி வகைகள் முழக்கம் செய்து, ஏழு கடல்களைப் போலப் பெரும் சப்தத்தைக் கிளப்ப, சண்டை நடக்கும் போர் முனைகளில் நின்று தமது வீரச் செயல்களைச் சொல்லும் அசுரர்களின் கோபம் குலைந்து அழிபட, தேர்கள் அழிபட, யானை, வலிமை உள்ள குதிரைகள் ஆகியவைகளின் ரத்தம் எட்டுத் திசைகளையும் மூட, பேய்கள், நரிகள், (கோட்டான் போன்ற) பறவைகள் மகிழ்ச்சி கொள்ள, சிரித்து அருளிச் செலுத்திய வேலாயுதனே. சிவ பெருமான் மகிழ்ந்தருளிய யானையின் அழகிய முகத்தைக் கொண்ட கணபதி கூட இருந்து மனம் மகிழ்ந்து அருள் புரிய, ஒப்பற்ற கயிலை மலையில் மகிழ்கின்ற, விளங்கும் வள்ளிமலை மாதாகிய வள்ளி காதல் கொண்டு அருகில் இருக்கும், புகழ் வாய்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 520 - கயிலைமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தனதனன, தானனா, தீததோ, உள்ள, திந்தன, திகுததிகு, தினன, போலவே, செயல்களைச், என்னும், செய்து, மேலும், கொண்ட, குலைந்து, மனம், அழிபட, பெருமாளே, தகுத, பருவ, குந்ததி, தாகுதோ, அளவாய், அளவுக்கு, பிறகு