பாடல் 509 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன ...... தனதான |
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில் வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே இகலிய பிரமக பால பாத்திர மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு தலைபறி யமணர்ச மூக மாற்றிய தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 509 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கிடதரி, தரிகிட, காட்டியும், தாத்தன, திறமும், விளங்க, அழகு, இன்ன, விதமான, ஆடுகின்ற, குகு, கொண்டு, மீன், தாகு, நீறு, டாத்திரி, காட்டிய, உடைய, பெருமாளே, சிவபெருமான்