பாடல் 503 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான |
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர் சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... யுடைசோர மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம் வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ...... செயலாமோ சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர் சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே. |
* உண்மை அடியார்களின் பக்குவ நிலையை எப்போதும் விரும்பி அணைந்து காக்கும் கரம் என்பது பொருள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 503 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, அழகிய, தத்ததன, விளங்கும், நடனம், ஆகிய, பரிசுத்தமான, பெரிய, சக்தி, கொண்டு, பலவிதமான, பெருமாளே, மார்பகங்களை, இன்ப, விளையாடி, வைத்து