பாடல் 499 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன ...... தனதான |
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல் மதவின்பத் துடனே பலபணி தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை தவளந்தப் புடனே கிடுகிடு நடைதம்பட் டமிடோல் பலவொலி சதளம்பொற் றடிகா ரருமிவை ...... புடைசூழ வெகுகும்பத் துடனே பலபடை கரகஞ்சுற் றிடவே வரஇசை வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும் விருமஞ்சித் திரமா மிதுநொடி மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது விடவும்பர்க் கரிதா மிணையடி ...... தருவாயே திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண ...... எனபேரித் திமிர்தங்கற் குவடோ டெழுகட லொலிகொண்டற் றுருவோ டலறிட திரள்சண்டத் தவுணோர் பொடிபட ...... விடும்வேலா அகரம்பச் சுருவோ டொளியுறை படிகம்பொற் செயலா ளரனரி அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை மதிதுண்டப் புகழ்மான் மகளொடும் அருள்செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே. |
* விளக்கக் குறிப்புகள்:தனிதம் (இங்கு அன்வயப் படுத்தப்பட்டது) = மேக கர்ச்சனை, தவளம் = மக்கள் கூட்டம்,கிடுகிடு = ஒரு பறை, விருமம் = பிரமை, உரு = அச்சம், சண்டம் = கூட்டம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 499 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திகுதோ, திகுதந்தித், திகுதிகு, துடனே, கூட்டம், மக்கள், தனனா, தனதன, தனதந்தத், கிடுகிடு, வரும், தேவர்களுக்கும், என்னும், உள்ள, வெறும், வாத்தியங்கள், பெருமாளே, செககண, செகசே, திகுர்தஞ்செச், குவடோ, மிக்க, வாத்தியம், கர்ச்சனை, பறையுடன்