பாடல் 496 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - வாசஸ்பதி
; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி-3 1/2
தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானன தனன தானன ...... தனதான |
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ னிடம தேறியெ ...... னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட ரிலகு மூலக ...... வொளிமேவி அருவி பாயஇ னமுத மூறவுன் அருளெ லாமென ...... தளவாக அருளி யேசிவ மகிழ வேபெற அருளி யேயிணை ...... யடிதாராய் பரம தேசிகர் குருவி லாதவர் பரவை வான்மதி ...... தவழ்வேணிப் பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் ...... அருள்பாலா மருவி நாயெனை யடிமை யாமென மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே மறைகு லாவிய புலியுர் வாழ்குற மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே. |
இருட்டும் சூரிய ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத தேவலோகத்தை யான் அடைந்து, என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி, அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற, உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக. மேலான தக்ஷிணாமூர்த்தி தேசிகரும், தமக்கு ஒரு குரு இல்லாதவரும், பரந்த கடல் போன்ற கங்கையும் வானத்துச் சந்திரனும் தவழ்கின்ற சடையரும், பவள நிற மேனியருமான எனது தந்தையாரும், பரம ரகசியமாகும் சிதம்பர ரகசியருமான சிவபிரான் அருளிய பாலனே, அடியேனிடம் வந்து கூடி, என்னை ஓர் அடிமையாக ஏற்றுக் கொண்டு, மகிழ்ந்து மெய்ஞ்ஞானத்தை அருள்வோனே, வேதங்கள் விளங்கும் புலியூர் சிதம்பரத்தில் வாழ்பவனே, குறப்பெண் வள்ளிமீது ஆசை கொண்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 496 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, யான், மகிழ்ந்து, பெருமாளே, எனது, அருவி, அருளி