பாடல் 495 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான |
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர் எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர் எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும் இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி யிணைசொல்க்¡£ வத்தரள வினவொள்தா லப்பனையி னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின் வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின் வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல் மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென் வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர் மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர் மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ் வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய் முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள் முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர் முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர் முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள் முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள் முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள் முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன் அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ் அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே. |
* சந்தம் பற்றி நீரார் என்பது நிரர் என வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 495 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தத்ததன, மரம், நிறைந்த, கொண்ட, உள்ள, கொடியும், என்பது, அமைந்துள்ள, வண்டுகள், வகைகள், மார்பகங்கள், அமுத, தானனந், உடைய, ஆகியவை, முதலிய, தம்பிரானே, ஊதுங், வேதம், யிணையிலா, சிவந்த, அணைந்த, உருவம், இவற்றுடன், மயில், வல்ல, பெண்ணாகிய, வாய்ந்த, நூல், முத்து, கொண்டதுமான, ஒன்று, அழகிய, ஒப்பான, சேர்ந்துள்ள, போல், எல்லாம், தாமரை, உடையவர்கள், ரம்பை