பாடல் 484 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தான தானன தனனா தானன தான தானன தனனா தானன தான தானன தனனா தானன ...... தனதான |
தாது மாமலர் முடியா லேபத றாத நூபுர அடியா லேகர தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே சாடை பேசிய வகையா லேமிகு வாடை பூசிய நகையா லேபல தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே மோதி மீறிய முலையா லேமுலை மீதி லேறிய கலையா லேவெகு மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார் மோக வாரிதி தனிலே நாடொறு மூழ்கு வேனுன தடியா ராகிய மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே காத லாயருள் புரிவாய் நான்மறை மூல மேயென வுடனே மாகரி காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே காதல் மாதவர் வலமே சூழ்சபை நாத னார்தம திடமே வாழ்சிவ காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே வேத நூன்முறை வழுவா மேதினம் வேள்வி யாலெழில் புனைமூ வாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே வீறு சேர்வரை யரசாய் மேவிய மேரு மால்வரை யெனநீள் கோபுர மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே. |
* அருணகிரிநாதருக்கு நடராஜப் பெருமானே முருகனாகவும், முருகனே நடராஜராகவும் பேதமின்றித் தரிசனம் தரப்பட்டது என்பது இதன் கருத்து.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 484 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனனா, புரிவாயாக, யானை, அருள், வந்து, விளங்கும், செய்யும், அந்த, விதமான, நாயகி, திருமால், மேரு, பெருமாளே, பேசும், அணிந்த, முன்னே