பாடல் 483 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தய்ய தானத் தானன தானன தய்ய தானத் தானன தானன தய்ய தானத் தானன தானன ...... தனதான |
கொள்ளை யாசைக் காரிகள் பாதக வல்ல மாயக் காரிகள் சூறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே கொல்லும் லீலைக் காரிகள் யாரையும் வெல்லு மோகக் காரிகள் சூதுசொல் கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே உள்ள நோவைத் தேயுற வாடியர் அல்லை நேரொப் பாமன தோஷிகள் உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன் உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு கையு நீபத் தார்முக மாறுமுன் உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே கள்ள மாயத் தாருகன் மாமுடி துள்ள நீலத் தோகையின் மீதொரு கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே கல்லி லேபொற் றாள்பட வேயது நல்ல ரூபத் தேவர கானிடை கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே தெள்ளி யேமுற் றீரமு னோதிய சொல்வ ழாமற் றானொரு வானுறு செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா தெள்ளு மேனற் சூழ்புன மேவிய வள்ளி வேளைக் காரம னோகர தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே. |
* முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 483 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, காரிகள், தய்ய, தானத், வல்ல, பெருமாளே, கொண்டவர்கள், அழகிய, போல், தில்லை, உள்ள, கொள்ளை, யாரையும், நல்ல, மேவிய, வள்ளி