பாடல் 482 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -....;
தாளம் -
தானத் தான தத்த தானத் தான தத்த தானத் தான தத்த ...... தனதான |
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற காமப் பூச லிட்டு ...... மதியாதே காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி னீழற் கேத ருக்கி ...... விளையாடிச் சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார் தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய் மாதைக் காத லித்து வேடக் கான கத்து வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன் வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ் மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத் தோர்து தித்த ...... பெருமாளே. |
காதை வெட்டுவது போல வேகமாக (அந்தக் காதின் மேல்) மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து, யாரையும் மதிக்காமல், மேகத்தை ஒத்து நிகர்க்கும் கருநிறத்தை உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி, (தன்னைக் கண்டவர்களுடைய) கருத்தை அழித்து, ஒழுங்காக பெரிதாக விளங்கி சேல் மீன் போன்று (ஆண்களை) வருத்துகின்ற கண்களை உடைய பெண்களின் தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற மார்பிலே மூழ்கி, காம வேட்கை மிக்க கொடுமையினின்றும், என்னுடைய உயிர் பிழைக்கும்படியான நல்ல வழிகளைத் தந்தருளுக. (வள்ளிப்) பெண் மீது ஆசை கொண்டு, வேடர்கள் வாழும் காட்டில் நறுமணம் வீசும் திருவடிகள் சிவந்து போகச் சென்றவனே, கடலில் சென்று ஒளிந்துகொண்ட, மாயத்தில் வல்ல (மாமரமாகிய) சூரனை வெட்டி, அவன் மாளும்படி போர் செய்து முடித்த கூரிய வேலனே, வீதியில் தேர் செல்லுவதால் எழும் தூசியிலே சூரியனுடைய வீரத் தேரும் மறைபடும் புலியூர் ஆகிய சிதம்பரத்தில் இருக்கும் மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க மறையோர்கள் துதிக்கின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 482 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மிக்க, தத்த, தானத், கேள்வி, உடைய, பெருமாளே, வெட்டி, காமப், வீரத்