பாடல் 481 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தானத் தானன தானன தானன தானத் தானன தானன தானன தானத் தானன தானன தானன ...... தனதான |
ஆரத் தோடணி மார்பிணை யானைகள் போருக் காமென மாமுலை யேகொடு ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர் ஆலைக் கோதினி லீரமி லாமன நேசத் தோடுற வானவர் போலுவர் ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே காருக் கேநிக ராகிய வோதிய மாழைத் தோடணி காதொடு மோதிய காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே காதற் சாகர மூழ்கிய காமுகர் மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள் காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே சூரர்க் கேயொரு கோளரி யாமென நீலத் தோகைம யூரம தேறிய தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே சோரிக் கேவெகு ரூபம தாவடு தானத் தானன தானன தானன சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா வீரத் தால்வல ராவண னார்முடி போகத் தானொரு வாளியை யேவிய மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே வேதத் தோன்முத லாகிய தேவர்கள் பூசித் தேதொழ வாழ்புலி யூரினில் மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 481 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தானத், கொண்ட, போல், பெருமாளே, செய்து, என்கின்ற, உள்ள, வாசலில், உடைய, உறவு, தேவர்கள், மேவிய, யானைகள், தோடணி, தோடுற, ராகிய, நீலத், காமுகர், வலையாலே, கோபுர