பாடல் 479 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்தத் தந்தனத்தத் தானன தானன தனத்தத் தந்தனத்தத் தானன தானன தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான |
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழூறல்க ...... ளதுகோதி அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ...... ளுறவோடே படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள் படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ...... ளவமாயப் பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள் பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை பரத்துற் றண்பதத்துப் போதக மீதென ...... அருள்தாராய் தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில் சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில் தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ...... மணவாளா திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல் திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 479 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்தத், அழகிய, தங்களுடைய, தந்தனத்தத், தாமரை, வீசி, வீற்றிருக்கும், கைகளால், போல், பெருமாளே, கேசவர், மாயவர், திமித்தத், திந்திமித்தத், வெற்றி