பாடல் 475 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தாந்த தானன தந்த தனந்தன தாந்த தானன தந்த தனந்தன தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான |
கூந்த லாழவி ரிந்து சரிந்திட காந்து மாலைகு லைந்து பளிங்கிட கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங் கூண்க ளாமென பொங்கந லம்பெறு காந்தள் மேனிம ருங்குது வண்டிட கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச் சாந்து வேர்வின ழிந்து மணந்தப வோங்க வாகில்க லந்து முகங்கொடு தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந் தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச் சேண்சு லாமகு டம்பொடி தம்பட வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில் சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன் வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 475 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாந்த, தனந்தன, தந்த, தானன, உள்ள, போன்றும், வணங்கிய, கொள்ள, போல், மிக்கு, கொண்ட, விளங்கும், கொஞ்ச, நாயகி, அழிந்து, திந்திமி, சாந்து, காந்தள், கெண்டை, கூர்ந்த, வோங்க, கொஞ்சிட, பேரிகை, தந்தன, தோதக, தீந்த, பம்பை