பாடல் 474 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன ...... தந்ததான |
கரிய மேக மெனுங்குழ லார்பிறை சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர் கமுக க்¡£வர் புயங்கழை யார்தன மலைக ளாஇ ணையுங்குவ டார்கர கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை வரிய பாளி தமுந்துடை யாரிடை துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல் மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர் மயில்கள் போல நடம்புரி வாரியல் குணமி லாத வியன்செய லார்வலை மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய் சரியி லாத சயம்பவி யார்முகி லளக பார பொனின்சடை யாள்சிவை சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே சதப ணாம குடம்பொடி யாய்விட அவுணர் சேனை மடிந்திட வேயொரு தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா அரிய மேனி யிலங்கையி ராவணன் முடிகள் வீழ சரந்தொடு மாயவன் அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும் அழகு சோபி தஅங்கொளு மானன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 474 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர், அழகு, போலவும், தனந்தன, உடைய, ஆகிய, வாய்ந்த, தானன, வாழை, உடையவள், பொன், செலுத்திய, போன்று, கொண்ட, ராவணன், தம்பிரானே, மேகம், சேனை, கந்தவேளே, முடிகள்