பாடல் 471 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - முகாரி;
தாளம் - ஆதி 4 களை - 32
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தத்த தந்ததன தான தந்ததன தத்த தந்ததன தான தந்ததன தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான |
கட்டி முண்டகர பாலி யங்கிதனை முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக் கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமற் கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ...... முறமேவித் துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ எட்டி ரண்டுமறி யாத என்செவியி லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே செட்டி யென்றுசிவ காமி தன்பதியில் கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே செட்டி யென்றுவன மேவி யின்பரச சத்தி யின்செயலி னாளை யன்புருக தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே. |
(*1) இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
(*2) ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
(*3) 'வெள்ளைக் குதிரை' சுழுமுனையாகிய வெள்ளை நாடியைக் குறிக்கும்.
(*4) 'லலாட மண்டபம்' புருவ மத்தியைக் குறிக்கும். இங்கு 'சுழுமுனை', 'இடைகலை', 'பிங்கலை' ஆகிய மூன்று நாடிகளும் கூடுவதால் பிரகாசமான மண்டபம் தோன்றும்.
(*5) அஷ்டாங்க யோகம் என்ற எட்டு வகை யோகங்கள் பின்வருமாறு:1. இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமுறாமை, பிறர் பொருள் வெ·காமையுடன் புலன் அடக்குதல்.2. நியமம் - தவம், தூய்மைத் தத்துவம் உணர்தல், புனிதம், தானம், சைவ முறைகள், சைவ சித்தாந்த ஞானம், யாகம்.3. ஆசனம் - உடலால் செய்யும் யோக முறைகள் - குறிப்பாக பத்ம, சிம்ம, பத்ர, கோமுக ஆசனங்கள்.4. ப்ராணாயாமம் - ரேசகம், கும்பகம், பூரகம் என்ற வகைகளிலே மூச்சை அடக்கி ஆளும் முறை.5. ப்ரத்யாஹாரம் - இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்பி, இறைவனை உள்முகமாகப் பார்த்தல்.6. தாரணை - மனத்தை ஒருநிலைப் படுத்தி முதுகு நாடியிலுள்ள ஆறு சக்ர ஆதாரங்களிலும் இறைவனை பாவித்தல்.7. தியானம் - ஐம்புலன்கள், பஞ்ச பூதங்கள், மனம், சித்தம் முதலிய அந்தக்கரணங்கள் - இவற்றை அடக்கி தியானித்தல்.8. சமாதி - மனத்தைப் பரம்பொருளோடு நிறுத்தி ஸஹஸ்ராரத்தில் சிவ சக்தி ஐக்கியத்தோடு ஒன்றுபடல்.(ஆதாரம் 'திருமந்திரம்', திருமூலர் அருளியது).
(*6) அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
(*7) சிவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
(* 8) தமிழில் எட்டும் இரண்டும் சேர்ந்த தொகையாகிய பத்து, 'ய' என்று எழுதப்படும். இந்த எழுத்து 'நமசிவாய' என்ற பஞ்சாட்சரத்தின் கடைசி எழுத்து. இது குண்டலினி யோகத்தின் 'ஆக்ஞா' சக்கரத்தில் இரண்டு புருவ மத்தியில் உள்ளது. இதன் கடவுள் 'சதாசிவன்' - லிங்க உருவத்தில் உள்ளார்.
(* 9) தமிழில் எட்டுக்கு உரிய எழுத்து 'அ'. இரண்டுக்கு உரிய எழுத்து 'உ'. இவற்றோடு 'இரண்டும்' என்ற வார்த்தையின் கடைசி எழுத்தாகிய 'ம்' என்ற எழுத்தைச் சேர்த்தால் 'அ+உ+ம்'= 'ஓம்' என்று ஆகிறது.
(*10) குமார தந்திரம் என்ற தோத்திரத்தில் முருகக் கடவுளின் 16 திருவுருவ வகைகள் கூறப்படுகின்றன: 1. சக்திதரர் 2. ஸ்கந்தர் 3. தேவசேனாதிபதி 4. சுப்ரமணியர் 5. கஜவாகனர் 6. சரவணபவர் 7. கார்த்திகேயர் 8. குமாரர் 9. ஷண்முகர் 10. தாரகாரி 11. ஸேனானி 12. பிரம்மசாஸ்த்ரு 13. வள்ளிகல்யாணசுந்தரர் 14. பாலஸ்வாமி 15. கிரெளஞ்சபேதனர் 16. சிகிவாகனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 471 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், தந்ததன, பத்து, ஆதல், கரம், கட்டி, பிங்கலை, இடைகலை, சக்தி, உரிய, எழுத்து, உடைமை, முறைகள், எட்டி, இரண்டும், வந்து, தத்த, அந்த, செட்டி, முனை, உள்ளது, மூன்று, சுழு, சக்கரம், சுழுமுனை, நாடிகளுள், விடும், சுவாசம், ஒன்று, தமிழில், யும், உணர்தல், பின்வருமாறு, அடக்கி, இறைவனை, கடைசி, உருவினன், புருவ, மண்டபம், ப்ராணாயாமம், இருத்தல், பெயர்களும், ஸஹஸ்ராரம், குறிக்கும், ஆதாரம், என்றும், ஐக்கியம், விந்து, பிரமரந்திரம், மேல், எல்லா, தாரணை, தியானம், கபால, செய்து, லெட்டி, கட்டு, முருகோனே, ரண்டுதிசை, மூலாதார, பெருமாளே, முதலிய, சந்திர, தகிட, பூரகம், இங்கு, காற்றுக்கு, ரேசகம், கும்பகம், பெயர், சென்று, வளையல், எல்லாம், வெந்து, சிவபெருமானுடைய, எட்டும், மீதும், இருந்து, உடலில்