பாடல் 469 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி ; தாளம் - அங்கதாளம் - 19
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தான தான தான தானன தான தந்த தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான |
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங் காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய் வேயி லாய தோள மாமட வார்கள் பங்க யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே வேத கீத போத மோனமெய் ஞான நந்த முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 469 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிட, தந்த, தம்பிரானே, நாடக, கொண்டு, விரும்பி, விளங்கும், மனம், நின்று, சூரர்கள், தத்த, தகதிமி, வீடு, கூடு, தேடி, மங்கை