பாடல் 465 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த ...... தனதான |
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற் படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும் பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 465 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சுழற்றி, தனனந், ரண்டு, தந்த, தனத்த, கொண்ட, கொண்டு, அழகிய, செவ்விய, விளங்கும், வந்து, பவளம், செம்பொ, வந்த, பெருமாளே