பாடல் 446 - திருக்காளத்தி - திருப்புகழ்

ராகம் -
கல்யாணி;தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான |
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப் பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச் சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச் சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற் சுகித்தே சுற்றத் தவரோ டின்பத் தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக் குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக் குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக் குறித்தே முத்திக் குமறா வின்பத் தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க் குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய் புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக் கழைச்சா பத்தைச் சடலா னுங்கப் புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத் தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப் புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே திருக்கா னத்திற் பரிவோ டந்தக் குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத் திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட் புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற் றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே. |
* திருக்காளத்தி என்னும் 'காளஹஸ்தி' ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் ரேணுகுண்டாவுக்கு வடகிழக்கில் 15 மைலில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 446 - திருக்காளத்தி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விரும்பி, என்னும், அழகிய, தகதிமி, தந்தத், தனத்தா, தத்தத், தனனா, கொண்டு, என்னை, கொண்ட, வள்ளி, தந்து, கந்தப், பரிவோ, பதிவாழ், மங்கப், னம்பொற், பெருமாளே, பொடியாய், அன்பு