பாடல் 439 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன ...... தனதான |
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ வாளி யொத்தவிழி யார்மு கக்கமல மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம் வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர் தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள் சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச் சூத கச்சரச மோடெ யெத்திவரு வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல் தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ சேக ணச்செகண தோதி மித்திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை தேச முட்கவர ஆயி ரச்சிரமு மூளி பட்டுமக மேரு வுக்கவுணர் தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா ஆக மத்திபல கார ணத்தியெனை யீண சத்திஅரி ஆச னத்திசிவ னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே. |
* சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கிக் கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து சோமுகனைக் கொன்று நூல்களை மீட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 439 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, மேரு, உடையவர்கள், அணிந்த, உடையவர், தரும், செய்து, கடலுள், என்னும், பெரிய, ஒலிக்க, தேடி, டாடு, யார்ப, மீது, டுட்டமட, டீகு, கத்திமித, தத்தொகுர்தி, பெருமாளே