பாடல் 434 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான ...... தனதான |
புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக பொறியுட லிறந்து போன ...... தளவேதுன் புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும் பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப் பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படைகட லிறந்து போக ...... விடும்வேலா அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே. |
நெருங்கிச் சேர்ந்து அணையப்படும் மார்பகங்களை உடைய பெண்களின் வலையில் அலைபட்டு, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளைக் கொண்ட உடல் மாய்ந்து போனவைகளுக்கு ஏதேனும் கணக்கு உண்டோ? உனது புகழைச் சொல்லும் வேதாகம நூல்களைக் கற்றறிந்து, இனிமேல் என்னுடைய உள்ளம், பொருள், உயிர் ஆகிய இம் மூன்றையும் ஒரு பொருட்டாகக் கருதும் அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய, உன்னைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக் கொண்ட தேவயானை, வள்ளியுடன், விளங்குகின்ற ஆறு திரு முகங்களும், ரத்தின மணி கி¡£டங்களும் தம்முள் கொண்ட சூரிய ஒளி திக்குகளில் எல்லாம் கிரணங்களைப் பரவி வீச, கணக்கில்லாத கோடி முநிவர்கள் புகழ்ந்து வர மயிலின் மேல் மகிழ்ச்சியுடன் என்னை விரும்பி நீ வர வேண்டும். பருத்த மார்பகங்களை உடைய தேவ மாதர்கள் குயில், கிளி இவைகளின் கூட்டங்கள் போல அன்புடன் மகிழ்ந்து வேதங்களைக் கூறவும், பறையும், முரசும், கணக்கற்ற பேரிகை வகைகளும் முறைப்படி பேரொலி எழுப்பவும், இழிந்தவர்களாகிய அசுரர்களுடைய சேனைக்கடல் மடிந்து போகவும் செலுத்திய வேலாயுதனே, அழகிய கிளி, நரம்புள்ள வீணை, குயில், புறாக் கூட்டங்கள் போல படுக்கையில் கண்டத்து ஓசையை (புட்குரல் ஒலியை) எழுப்பும் மாது ஆகிய திருமாலின் மகளை (வள்ளியை) திருமணம் செய்து சென்று, என்னுடைய துன்பங்கள் எரிந்து அழிய திருஅருணை நகரில் உள்ள மலையில் (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 434 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தனதன, தனந்த, என்னுடைய, ஆகிய, குயில், கூட்டங்கள், கிளி, உடைய, வள்ளியுடன், பெருமாளே, கோடி, லிறந்து, மடந்தை, முநிவர்கள், புகழ்ந்து, வீணை, மகிழ்ந்து, மார்பகங்களை