பாடல் 433 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான |
பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம் பாடா வாடா வேடா வாலே பாடா யீடற் ...... றிடைபீறுந் தோலா லேகா லாலே யூனா லேசூழ் பாசக் ...... குடில்மாசு தோயா மாயா வோயா நோயால் சோர்வாய் மாளக் ...... கடவேனோ ஞாலா மேலா வேதா போதா நாதா சோதிக் ...... கிரியோனே ஞானா சாரா வானாள் கோனே நானா வேதப் ...... பொருளோனே வேலா பாலா சீலா காரா வேளே வேடக் ...... கொடிகோவே வீரா தாரா ஆறா தாரா வீரா வீரப் ...... பெருமாளே. |
பால் போன்றதும், (இனிய தமிழ்) நூல் போன்றதும், தேன் போன்றதும், நீண்டு கம்பிப் பதமா¡ய் வருகின்ற காய்ச்சின வெல்லம் போன்றதுமாய் இனிக்கும் வாய்ச் சொல்லை உடைய கொடி போன்ற விலைமாதர்கள் பாடியும், ஆடியும் விருப்பத்தைத் தெரிவிக்கும் வலிமையினாலே காமநோய் உற்றவனாய் என் தகுதி தொலைந்துபோய் நின்று, வாழ்க்கையின் இடையிலேயே கிழிபட்டுப் போகும் தோலாலும், காற்றினாலும், மாமிசத்தாலும் சூழப்பட்டுள்ளதும், பற்றுகளுக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடல் குற்றங்கள் தோய்ந்தும், ஒளி மழுங்கியும், முடிவில்லாத நோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ? பூமியில் மேம்பட்டு நிற்பவனே, பிரமனுக்கு போதித்தவனே, நாதனே, ஜோதி மலையாகிய அருணாசலப் பிரானே, ஞான மார்க்கத்தில் முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே, பல வகையான வேதங்களுக்கும் உட் பொருளானவனே, வேலனே, பரமசிவ பாலனே, பரிசுத்த வடிவனே, செவ்வேளே, கொடி போன்ற வேடப் பெண் வள்ளியின் மணவாளனே, வீரத்துக்கு ஆதாரமானவனே, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே, வீரனே, வீரமுள்ள பெருமாளே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 433 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், தானா, போன்றதும், உரிய, கொடி, பெயர்களும், பெருமாளே, பாடா, கடவேனோ, வீரா, தாரா