பாடல் 424 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தந்தத் தந்தத் தனதன தானன தந்தத் தந்தத் தனதன தானன தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான |
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை கும்பத் தந்திக் குவடென வாலிய தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி சிந்திக் கந்தித் திடுகளை யாமுன தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய வந்தித் திந்தப் படிமட வாரொடு கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன் நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர் நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர நந்திக் கம்பத் தெழுநர கேசரி நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர் பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே. |
* இரணியனை வதைத்த நரசிம்மம் (திருமால்) உக்கிரம் கொண்டு உலகங்களை வருத்தத் தொடங்கினார். தேவர்கள் முறையிட, சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப்பட்சியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தைக் கீறி, அதன் தோலையும், முகத்தையும் சிவன் முன் வைத்தார். அதனால் சிவபெருமானுக்கு, சிங்க உரியும், நாரசிங்காம்பரன் என்ற பெயரும் உண்டாயின - சிவ புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 424 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தத், உள்ள, தானன, தனதன, நான், சிவபெருமான், என்னும், அழகிய, என்றெல்லாம், விளங்கியும், வஞ்சிக், தங்கித், பெருமாளே, எடுத்து