பாடல் 418 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானான தனதான ...... தனதான |
கோடான மடவார்கள் ...... முலைமீதே கூர்வேலை யிணையான ...... விழியூடே ஊடாடி யவரோடு ...... முழலாதே ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே நீடாழி சுழல்தேசம் ...... வலமாக நீடோடி மயில்மீது ...... வருவோனே சூடான தொருசோதி ...... மலைமேவு சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே. |
விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களிலும், கூரிய வேலுக்குச் சமமான கண்களிலும், ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமலே, (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக. விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஓடி, மயிலின் மேல் பறந்து வந்தவனே, நெருப்பான ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில், வீற்றிருக்கும், சோழ நாட்டார் புகழும், தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 418 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, வலமாக, தனதான