பாடல் 416 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதன தானான தானன தனதன தானான தானன தனதன தானான தானன ...... தனதான |
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக் குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப் பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப் பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ எழுகடல் தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன் இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய் அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர் அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே. |
குழந்தையாகப் பிறந்து, மாயை, காம மயக்கம் இவை உடைய வாலிபனாக வளர்ந்து, வீடு, மனைவி இவைகளோடு கூடிய நல்ல குலத்தவனாய் வாழ்ந்து, பின்பு நாட்டிலும், காட்டிலும் உழன்று தடுமாற்றம் அடைந்து, உடல் வளைந்து, கூன் பெரியதாய் ஆன கிழவனுமாக ஆகி, உயிர் போன பிறகு (உடல்) விறகுடன் சாம்பற் பொடி ஆவதையும் அறிந்து, (அந்த எண்ணத்தை விட்டுத்) தாவி, (குண்டலினி சக்ரத்தின்) பழமையான ஆறு ஆதாரங்களின்* மேல் நிலையில் நிகழும் உடம்பு கழிபட்ட நிலையை அடைந்து, சார்பு அற்றதும், துன்பம் இல்லாததுமானஆகாயத்தில் நாள் தோறும் நாலு அங்குல** அளவு வாயுவைக் கழியாது திருப்பி, பல விதமான யோகப் பயிற்சிகள் செய்த உடலை வளர்த்து, (இத்தனையும் செய்தபின்) சாவில்லாததும், அறிவு மயமானதுமான அழியாத முத்தி வீட்டை நாடிச் சென்று இனியாவது யான் போய்ச் சேருவேனோ? ஏழு கடல்களும் நெருப்பு மூண்டு எரியவும் மேரு மலையும் பொடிபடவும், பிரமனும், நான்கு வேதங்களும், சூரியனும் திசைமாறித் தறிகெட்டு ஓடவும், பழைய ஆதிசேஷன் உள்ள இருட்டற்ற பாதாள லோகமும், இமயமலையும் பொடிப்பொடியாகவும், சக்ரவாளகிரி இரண்டு பிளவுபட்டு வீழவும், எட்டுத் திக்குகளில் உள்ள மலைகள் சாய்ந்து விழவும், அழகு வாய்ந்த, சிறந்த இந்திரனும், தேவர்களும் (தங்கள்) பொன்னுலகில் குடியேறவும் செய்வித்து, அசுரர்களுடைய பெரிய சேனையை விளையாட்டுப்போல தூள்தூளாகச் செய்து, அமரினை மேவாத சூரரை அமர் செயும் அமைதியைப் பொருந்தாத சூரர்களோடு சண்டை செய்த வேலாயுதனே, சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** யோகி சராசரியாக 12 அங்குல வாயுவை பூரகம் மூலம் உள்ளே இழுத்து, 8 அங்குல பிராண வாயுவை கும்பகம் மூலம் தன்னுள் வைத்துக் கொண்டு, 4 அங்குல வாயுவை வெளியில் ரேசகம் மூலம் விடுகிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 416 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், தனதன, வாயுவை, அங்குல, தானன, மூலம், தானான, வாய்ந்த, உரிய, உள்ள, பெயர்களும், உடல், மேவாத, அமரினை, பாதாள, சூரரை, வாழ்வாக, அடைந்து, பெருமாளே, செய்த