பாடல் 402 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த ...... தனதான |
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக் குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென் றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும் அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங் கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே. |
இரண்டு வினைகளுக்கும் உணவிடமான புத்தம் புது தோல் பை, கரு வளருவதற்கு இடமான பாத்திரம் ஆகிய உடம்பு, துன்பங்களையே அடைத்து வைத்துள்ள, பாழடையப் போவதான குகை, துன்பமும் தீமையும் கொண்ட கடலின் நடுவில் திரிகின்ற மரக்கலம், மலச்சேறும் மூத்திர நீரும் நிரம்பிய இடம், இரவிலே தூங்குகின்ற பிணம் போன்ற, நோயினுக்கு உருவாய் அமைந்த பாத்திரம், ஐம்பூதங்களும் பொருந்தி உள்ள கூடு, என் மனத்துடன் உயிரும் (உடலை விட்டு) வெளியேறும் சிறு குடில் - ஆகிய இந்த உடம்பு அழியாமல் நிலைத்து நிற்கும் என்று, உலகத்தாரிடம் நான் கொண்டுள்ள, வினைப் பயனால் வரும், மயக்கம் நீங்கப் பெற்று, உனது இரண்டு தாமரைத் திருவடிகளை அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ? திரு அண்ணாமலையில் உயர்ந்து ஓங்கிய பரிசுத்தமான கோபுர வாயிலில், தாமரை போன்ற கைகளைக் கூப்பி தேவர்கள் தொழ வாழ்கின்ற அடியார்களின் தோழனே, முன் ஒரு காலத்தில் சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் உண்ட, புதுமை வாய்ந்த சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனாகிய திருமாலின் மருகோனே, கருணை நிறைந்த புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன், சர்ப்ப சிரேஷ்டரான பதஞ்சலி முநிவரும் தரிசித்த நடராஜரின்* மகனே, மலைகளைத் தூளாக்கும் தோகை உடைய மயில் வாகனனே, இலக்கிய நூல்களில் வல்லவனே, அரசனே, சத்திய சிரேஷ்டனாகிய கந்தனே, வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே.
* தில்லையில் நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற இருவர் காணும் பொருட்டே ஆடப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 402 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தாந்த, தனதன, தந்த, ஆகிய, பாத்திரம், இரண்டு, பதஞ்சலி, உடம்பு, மருகோனே, கந்த, யங்க, கேந்த்ர, பெருமாளே