பாடல் 401 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -
பூர்விகல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான |
இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க ...... மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ ...... டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த ...... அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ ...... டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் ...... தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே. |
நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, அஞ்ஞானமும், நோய்களும் அகல, நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி வண்டுகள் ¡£ங்காரம் செய்து முரல, யானைமுகன் கணபதி என் தம்பியே, முருகா என்றழைக்க, தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, விளங்க நடனம் செய்து, எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ச்சியடைந்த குருநாதனே, திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 401 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மங்க, தனதன, தந்த, நடனம், செய்து, பெருமாளே, அருள்