பாடல் 399 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஸாமா;
தாளம் - கண்டசாபு - 2 1/2 - எடுப்பு 1/2 தள்ளி
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான |
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே. |
இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி, நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே, உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே, சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 399 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனனத், தனதான, பெருமாளே, திருவருளைத், பெருவாழ்வே