பாடல் 397 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஸரஸ்வதி;
தாளம் - மிஸ்ரஜம்பை - 10
தனதாதன தானன தத்தம் ...... தனதான தனதாதன தானன தத்தம் ...... தனதான |
இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே. |
பனிக்கு அரசனாகிய சந்திரன் வீசுகின்ற நெருப்புக் கதிர்களாலே, மெல்லிய தென்றல் காற்றும், ஊர்ப் பெண்களின் ஏச்சும் வருத்துகின்ற தன்மையாலே, காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக. குமரா, முருகா, சடைமுடிப் பெருமான் சிவனுடைய குருநாதனே, குறமகள் வள்ளியின் ஆசையை அணைத்துத் தணிக்கும் திருமார்பா, தேவலோக வாழ்க்கையை அன்று அமரர்களுக்கு அருளியவனே, திருவண்ணாமலை வீதியில் வீற்றிருக்கும் பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.சந்திரன், தென்றல் காற்று, மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 397 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தென்றல், ஊர்ப், பெண்களின், மன்மதன், சந்திரன், பெருமாளே, தானன, தத்தம், தனதான, திருமார்பா, தனதாதன