பாடல் 394 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனதனா தானனத் தனதனா தானனத் தனதனா தானனத் ...... தனதான |
அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக் கவசமா யாதரக் ...... கடலூடுற் றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க் கறியொணா மோனமுத் ...... திரைநாடிப் பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப் பெரியஆ தேசபுற் ...... புதமாய பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப் பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப் படியுமா றாயினத் ...... தனசாரம் பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப் பரமமா யூரவித் ...... தகவேளே பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற் பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப் புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப் பொருதவே லாயுதப் ...... பெருமாளே. |
அழுதும், ஆ ஆ என இரங்கித் தொழுதும், அவ்வப்போது பக்தியால் நெகிழ்ந்தும், தன் வசமற்று, ஆதாரம் என்ற அன்புக் கடலில் திளைத்தும், அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளனக்குறியைத் தேடியும், தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல், வினைக்கு ஈடான பெரிய மாறுபட்ட வடிவங்களை அடையும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற பிறவி என்ற கடல் நீர்ச்சுழியிலே, நான் இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக. பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே, திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே, பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க, முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற போர் செய்த வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 394 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தானனத், கடல், பெருமாளே, நான்