பாடல் 389 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - முகாரி;
தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம் தனதன தனனம் ...... தனதான |
விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு விழிவெங் ...... கனல்போல வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி வழிவந் ...... திடுபோதிற் கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற வினர்கண் ...... புனல்பாயுங் கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும் படவர வணைகண் ...... டுயில்மாலம் பழமறை மொழிபங் கயனிமை யவர்தம் பயமற விடமுண் ...... டெருதேறி அரவொடு மதியம் பொதிசடை மிசைகங் கையுமுற அனலங் ...... கையில்மேவ அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையில் மருவும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 389 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஆகிய, தனதன, தனனம், மேல், பெருமாளே, அழகிய