பாடல் 380 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ....
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான |
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும் மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும் எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த சிவனைமுத லோது வித்த ...... குருநாதா திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே. |
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவி பாடியது போல் அமைந்தது.சந்திரன், மகளிரின் வசைச் சொற்கள், புல்லாங்குழல் இசை, மன்மதன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 380 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தனதனன, கொண்ட, தத்த, நான், பெருமாளே, சித்ர, வாய்ந்த