பாடல் 370 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இருதன கிரியசை தரஇடை துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித் தொடர வனமணி மகரமி லகுகுழை யடரு வனவிட மிளிர்வன ரதிபதி சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர வனச பதயுக பரிபுர மொலிபட மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும் வரைவி லரிவையர் தருசுக சலதியி லலையு மெனதுயி ரநுதின நெறிதரு மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே முகிலு மதியமும் ரவியெழு புரவியு நெடிய குலைமிட றிடறமு துககன முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ் தடமு முளரிய அகழியு மதிள்களு முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே அகிலு மருதமு முகுளித வகுளமு மமுத கதலியும் அருணமும் வருடையு மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண் டருவி யிழிதரு மருவரை தனிலொரு சவர வனிதையை முநிதரு புனிதையை அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 370 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, நாள், கடலில், பாயும், மீன்களும், ஆடும், மரம், ஒப்பற்ற, தோறும், ஒத்த, மணம், ஆகிய, பெருமாளே, இரண்டு, போல், கயல், விளங்கும், தாமரை