பாடல் 352 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
சாரங்கா; தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த ...... தனதான |
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன் இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக் குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே. |
* பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன் குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான் - காஞ்சிப் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 352 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, ரிந்து, தனதனாத், நான், இல்லாத, எனக்கு, திரிந்து, வடிவம், செய்து, தவம், பெருமாளே, கத்த, தித்தி, நன்றி, கெட்ட, செம்பொன், வந்த, வந்து, தகிட, நின்று