பாடல் 335 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
பஹுதாரி; தாளம் - திஸ்ர ரூபகம் - 5
- எடுப்பு - /3 0
- எடுப்பு - /3 0
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் ...... தனதான |
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய் துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச் செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச் செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக் கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக் கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே. |
குற்றங்கள் நிறைந்த பை, மலம் மிகுந்த பை, சுடுசொல், பொய், வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த குடிசையான இந்த உடலை விரும்பி, குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று, அழகிய விசித்திரமான கச்சணிந்த பெருமார்புப் பெண்டிரைச் சேர்வதால் வரும் கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு வேதனையுற்று, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல், பரிசுத்த மனதுடன் பக்தி பூண்ட பக்தர்களுக்கு இணையாக சிறிதளவேனும் உன்னைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? எந்தத் திக்கிலும் உதவியின்றி, தனிப்பட்டு, கடைசியில் பச்சைநிற அலைகள் மோதும் கடலுக்குள்ளே போய்ச் சேர்ந்து, இலைகளோடு கூடிய மாமரமாக மாறிய சூரனுடன் போர் செய்த வேலனே, செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் போன்ற கிளியாகிய தேவயானையை வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டுபவனே, (பிரமன் முதலியோர் சா£ரத்தினின்றும்) சுழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி, அக்கினியை கண்ணிலே வைத்த தலைவர் சிவபிரானுக்கு குருவான பெரியவனே, திரளான துதிப்பாடல்களால் ஏத்தப்பெற்ற, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 335 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தத்தத்தத், தத்தத், பெருமாளே, கற்றுப், பெறுவேனோ