பாடல் 334 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான |
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச் சத்தப் படுமைக் ...... கடலாலே சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத் தட்டுப் படுமப் ...... பிறையாலே சித்தத் துக்குப் பித்துற் றுச்சச் சித்ரக் கொடியுற் ...... றழியாதே செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச் செச்சைத் தொடையைத் ...... தரவேணும் கொத்துத் திக்குப் பத்துட் புக்குக் குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக் கொச்சைக் குறவிக் ...... கினியோனே சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத் துக்கத் தையொழித் ...... திடும்வீரா சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச் சொக்கப் பதியிற் ...... பெருமாளே. |
அலைகள் தாவித் தாவிச் சென்று ஓர் ஒழுங்கு முறையில் ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும், (கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும்) பாம்பால் பிடி படுதல் என்னும் ஆபத்தில் அகப்பட்டு, கெடுதல் உற்று தடை படுகின்ற அந்தச் சந்திரனாலும், மனதில் மோக வெறி கொண்டு, அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிந்து போகாமல், (உனது) செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும், தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி மாலையைத் தந்தருள வேண்டும். நிறைந்துள்ள பத்துத் திக்குகளிலும் புகுந்து, வேலால் குத்தி, கிரெளஞ்ச மலையைப் போரில் வென்ற வேலனே, மிழற்றும் பேச்சைப் பேசுபவளும், காடு மலைகளில் இருப்பவளும், அழகிய பச்சை நிறம் கொண்டவளும் ஆகிய குறப் பெண் வள்ளிக்கு இனியவனே, பரிசுத்தமான, பக்தியில் உயர்ந்த அன்பர்களுக்கு மனதில் உள்ள துயரங்களை ஒழிக்கும் வீரனே, தேவ உலகுக்கு ஒப்பான கச்சி எனப்படும் அழகிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.அலைகள், கடல், சந்திரன் முதலியவை தலைவனின் பிரிவுத் துயரால் ஏற்படும் விரக தாபத்தை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
கடலாலேதட்டுப் படுமப் பிறையாலேசித்ரக் கொடியுற் றழியாதேசெச்சைத் தொடையைத் தரவேணும்குத்திக் கிரியைப் பொரும்வேலாகொச்சைக் குறவிக் கினியோனேதுக்கத் தையொழித் திடும்வீராசொக்கப் பதியிற் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 334 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், பெருமாளே, அழகிய, அலைகள், மனதில், பெண், பதியிற், எனப்படும், தையொழித், சித்தத், படுமப், கொடியுற், தொடையைத், கிரியைப், குறவிக்