பாடல் 330 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - பெஹாக்;
தாளம் - அங்கதாளம் - 6
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தத்தத் தத்தத் ...... தனதான தத்தத் தத்தத் ...... தனதான |
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் முற்றச் சுற்றிப் ...... பலநாளும் தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச் சற்றுப் பற்றக் ...... கருதாதோ வட்டப் புட்பத் ...... தலமீதே வைக்கத் தக்கத் ...... திருபாதா கட்டத் தற்றத் ...... தருள்வோனே கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. |
சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக, விலங்கு என்ற நால்வகை கதிகளிலும் முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும் தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ? வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே, துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 330 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், பெருமாளே, தனதான, தகிட