பாடல் 329 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - பாகேஸ்ரீ;
தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2
தக-1, திமி-1, தகதகிட-2 1/2
தக-1, திமி-1, தகதகிட-2 1/2
தத்தத் தனதான தத்தத் ...... தனதான தத்தத் தனதான தத்தத் ...... தனதான |
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே. |
அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி, பொருள் மீதும் ஆசையினை வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை யான் பெறுதற்கு இயலுமோ? வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே, கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே, காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 329 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், தனதான, பெருமாளே