பாடல் 290 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனன தத்தன தனன தத்தன தனன தத்தன ...... தனதான |
மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர் மதிமு கத்திய ...... ரழகான மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர் மனது ருக்கிக ...... ளணைமீதே கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு கலவி யிற்றுவள் ...... பிணிதீராக் கசட னைக்குண அசட னைப்புகல் கதியில் வைப்பது ...... மொருநாளே குலகி ரிக்குல முருவ விட்டமர் குலவு சித்திர ...... முனைவேலா குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர் குமர சற்குண ...... மயில்வீரா தலம திற்புக லமர ருற்றிடர் தனைய கற்றிய ...... அருளாளா தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு தணிம லைக்குயர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 290 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர், தத்தன, மயில், கதியில், ழிச்சியர், பெருமாளே