பாடல் 278 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - சிந்துபைரவி
; தாளம் - கண்டஜம்பை - 8
தனத்த தத்தனத் ...... தனதான தனத்த தத்தனத் ...... தனதான |
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல் நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற் கனத்த தத்துவமுற் ...... றழியாமற் கதித்த நித்தியசித் ...... தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே செனித்த புத்திரரிற் ...... சிறியோனே திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே. |
நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும், நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும், பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக. மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே, மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே, சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே**, திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
** சிவ குமாரர்கள் நால்வர்: விநாயகர், வீரபத்திரர், பைரவர், முருகன் (அனைவருக்கும் இளையவர்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 278 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்துவம், தத்துவங்கள், புறநிலை, இருக்கவும், யான், தத்தனத், தனதான, பெருமாளே, தனத்த