பாடல் 273 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ........;
தாளம் -
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான |
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியி னித்தந டிப்பவர் சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில் இதத்தை யோடவி டுத்தும யக்கிடு சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ தரித்து நீறுபி தற்றிடு பித்தனு மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே சமப்ர வீணம தித்திடு புத்தியில் இரக்க மாய்வரு தற்பர சிற்பர சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட விதித்த வீரச மர்க்கள ரத்தமு மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில் விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே பெருக்க மோடுச ரித்திடு மச்சமு முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின் பிணித்த போதுவெ டித்துர சத்துளி கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே. |
* சிவபிரானை அன்பின் மிகுதியால் சுந்தரமூர்த்தி நாயனார் 'பித்தா' என்று அழைத்தார்.
** திருத்தணிகையில் சிவபெருமானுக்குக் குருநாதராக முருக வேள் யோக நிலையில் இருந்து உபதேசம் செய்தார். ஆதலால் முருகவேள் தக்ஷிணா மூர்த்தி ஆனார். சிவனே முருக வேள் ஆதலின் தனக்குத் தானே குரு மூர்த்தியாயினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 273 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தனத்த, தானன, அவற்றின், குரு, வீரனே, முருக, வேள், தக்ஷிணா, திருத்தணிகையில், செய்து, சூரனை, புத்தியில், தித்திகு, பெருமாளே, மனதில், பெரிய