பாடல் 259 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - கானடா;
தாளம் - அங்கதாளம் - 11 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான |
கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே. |
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 259 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிட, தந்ததான, கடல், மன்மதன், தாத்தன, தந்த, தகதிமி, தனத்த, தத்தனத்