பாடல் 258 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான |
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக் கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங் கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற் கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத் திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால் எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத் தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும் பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப் பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப் படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச் செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத் திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 258 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தனத், கொண்ட, உள்ள, அழகிய, உடைய, பெருமாளே, மேலும்