பாடல் 238 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதான தத்த தந்த தனதான தத்த தந்த தனதான தத்த தந்த ...... தனதான |
விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு விரகான லத்த ழுந்த ...... நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 238 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, அன்று, தத்த, தந்த, சொல்லி, முருகனே, வீற்றிருக்கும், உள்ள, வென்ற, நின்று, விலையாக, வெட்சி, பெருமாளே