பாடல் 237 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான |
விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன தனத்த னந்தன தனதன வெனவொலி விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ...... மலைபாய மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத் தரித்த தந்திரி மறிபுய மிசைபல பணிக்கி லங்கிய பரிமள குவடிணை தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர் சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ...... தொழியாதோ உரித்த வெங்கய மறியொடு புலிகலை தரித்த சங்கரர் மதிநதி சடையினர் ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ...... முருகோனே உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல் குவட்டை யும்பொடி படசத முடிவுற வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ...... விடும்வேலா வரித்த ரந்துள வணிதிரு மருவிய வுரத்த பங்கயர் மரகத மழகிய வணத்த ரம்பர முறவிடு கணையினர் ...... மருகோனே வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு குறத்தி மென்புன மருவிய கிளிதனை மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 237 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனத்த, தரித்த, உடையவரும், தந்தன, பொருந்திய, விளங்க, கூடிய, மேல், ஒப்பற்ற, அழகிய, செலுத்திய, மீது, மலரை, விளங்கும், சங்கரர், உரித்த, னந்தன, மருவிய, மந்திர, உள்ள, வாய்ந்த, பெருமாளே, வண்டுகள்