பாடல் 226 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதன தானன, தனதன தானன தனதன தானன ...... தனதான |
பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி ...... லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர் நிரைதரு மூரலி ...... னகைமீது நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல் நிலையெழ வேயலை ...... வதுவாமோ அரவணை யார்குழை பரசிவ ஆரண அரனிட பாகம ...... துறைசோதி அமையுமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதருள் ...... புதல்வோனே குரவணி பூஷண சரவண தேசிக குககரு ணாநிதி ...... அமரேசா குறமக ளானைமின் மருவிய பூரண குருகிரி மேவிய ...... பெருமாளே. |
* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 226 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், தனதன, தானன, பார்வதி, அழகிய, டாகினி, பெருமாளே