பாடல் 225 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி;
தாளம் - ஆதி
தனதன தனதன ...... தனதான தனதன தனதன ...... தனதான |
நிறைமதி முகமெனு ...... மொளியாலே நெறிவிழி கணையெனு ...... நிகராலே உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ உனதிரு வடிவியினி ...... யருள்வாயே மறைபயி லரிதிரு ...... மருகோனே மருவல ரசுரர்கள் ...... குலகாலா குறமகள் தனைமண ...... மருள்வோனே குருமலை மருவிய ...... பெருமாளே. |
பூரண சந்திரன் போன்ற முகத்தின் பிரகாசத்தாலும், வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள் அம்பு போலச் செய்யும் போரினாலும், சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு) உன்னிரு திருவடிகளை இனியாகிலும் தந்தருள்வாயாக. வேதங்களில் சொல்லப்படும் திருமால், இலக்குமியின் மருகோனே, பகைவர்களாம் அசுரர்களின் குலத்தை அழித்த காலனே, குறத்தி வள்ளியை திருமணம் செய்து அருளியவனே, குருமலை (திருவேரகம்) வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 225 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, பெருமாளே, குருமலை, மருகோனே, தனதான