பாடல் 219 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தானதன தந்த தத்த தானதன தந்த தத்த தானதன தந்த தத்த ...... தனதான |
சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண் மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச் சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை காலமுமு டன்கி டக்கு ...... மவர்போலே காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு நாளுமிக நின்ற லைத்த ...... விதமாய காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி லேயடிமை யுங்க லக்க ...... முறலாமோ ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை பூகமரு தந்த ழைத்த ...... கரவீரம் யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும் ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீரா சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர பாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலா சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த சூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே. |
* முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள் உடையவவைகளாக இருந்தனவாம்.எங்கும் பறந்து விழுந்து, உயிர்களுக்குத் தீங்கு செய்ததால், இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளை அறுத்துத் தள்ளினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 219 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தானதன, தத்த, உடைய, இந்திரன், பெருமாளே, மலைகளின், கைத்த, ணித்த, கொண்டு, பச்சை