பாடல் 208 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - திஸ்ர்ருபகம் - 5
தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் ...... தனதான |
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் ...... சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் ...... படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேலங் ...... கெறிவோனே தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ் சுவாசமது தானைம் ...... புலனோடுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 208 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனாதனன, தானம், போலும், விடாமல், வாழ்வும், பெருமாளே