பாடல் 169 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன ...... தனதான |
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ...... துணர்தேனே சூதனைய சீதஇள நீரான பாரமுலை மீதணைய வாருமிதழ் தா¡£ரெ னாணைமொழி சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக ...... மயலானேன் ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை யாளமிட வாருமென வேமாத ரார்களுட னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி ...... யுனையோதேன் ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் ...... தருவாயே மாகமுக டோடகில பாதாள மேருவுட னேசுழல வாரியது வேதாழி யாவமரர் வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது ...... கடைநாளில் வாருமென வேயொருவர் நோகாம லாலவிட மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும் வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய ...... மருகோனே மேகநிக ரானகொடை மானாய காதிபதி வாரிகலி மாருதக ரோபாரி மாமதன வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ...... துளமேவும் வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் ...... பெருமாளே. |
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 169 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, நான், தானான, வாழும், அடிமை, ஆவேன், தேவர்கள், உடைய, உனக்கு, பெரிய, வருவாயாக, காவேரி, வாருமென, பெருமாளே, உகந்த, யானடிமை, போல், தருவாயாக