பாடல் 170 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான |
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. |
* இது 'திருக்கற்குடி' அல்லது 'உய்யக்கொண்டான்' என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.
** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் 'ஆதி உலா' என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். - பெரிய புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 170 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, சேரமான், தந்தன, என்னும், கொண்டவனே, தனாதன, தானா, கொங்கு, சுந்தரர், கயிலையின், கயிலைக்கு, சிறந்த, சேரர், மீதே, அரசனே, பெருமாளே